மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா : இன்றைய நிலவரம்!

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 25 பேர் இறுதியாக அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு  தெரிவிக்கின்றது.

- Advertisement -

இதேவேளை, இறுதியாக கொரோனா தொற்றுக்குள்ளான 25 பேரில் 23 பேர் கடற்படையினர் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய இருவரும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 520 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை,  கொரோனா தொற்றுக்குள்ளான 431 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கமைய, தேசிய தொற்று நோய் வைத்தியசாலை,  வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலை ஆகியவற்றில்  கொரோனா தொற்று காரணமாக இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  218 பேர் இதுவரை  கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வெளியில் ஆயிரத்து 356 பேர் இதுவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தினசரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடலாவிய ரீதியில் 43 ஆயிரத்து 137 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 81 பி.சி.ஆர். பரிசோதனைகள் நாடலாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

போதைப்பொருளுடன் சீதுவை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது!

சீதுவை பகுதியில் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 150 கிராம் ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா 6 கிலோ ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த...

இலங்கயில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் மாலி நாட்டிற்கு அனுப்பி வைப்பு!

இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட புதிய ஒன்பது நவீன Unibuffels கவச வாகனங்கள், மாலி நாட்டில் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன்,  புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்களும் இவ்வாறு பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...

கொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்!

குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...

Developed by: SEOGlitz