மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு திரும்ப முடியாமல் ருமேனியாவில் இலங்கையர்கள் நிர்க்கதி!

- Advertisement -

சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கு விமானங்கள் இன்மையால் இலங்கையர்கள் சிலர் ருமேனிய விமான நிலையத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ருமேனியாவிலுள்ள போடோசானி பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 36 இலங்கையர்களே இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ருமேனியாவின் ஒட்டோபெனி விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட குறித்த தொழிலாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் போன்ற அத்தியவசியத் தேவைகள்கூட பூர்த்தி செய்யப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை அண்மையில் இலங்கையைச் சேர்ந்த 43 ஊழியர்கள் கைவிலங்கிடப்பட்டு அங்குள்ள ஒரு தொழிற்சாலையின் பாதுகாவலர்களினால் மோசமாகத் தாக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz