நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ரத்துசெய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் மீதான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஏனைய நீதியரசர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.