மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லத்தண்ணி பிரதேசத்தில் பிடிக்கப்பட்ட அரியவகை கரும்புலி உயிரிழந்தது!

- Advertisement -

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஸபான தோட்டத்தில் அண்மையில் பிடிக்கப்பட்ட அரியவகை கரும்புலி இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அழிந்துவிட்டதாகக் கூறப்படும் குறித்த கரும்புலி நல்லத்தண்ணி வாழமலை பகுதியில் கடந்த இருபத்தியாறாம் திகதி பிடிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

கம்பி வலையில் சிக்கிய நிலையில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்ட குறித்த கரும்புலிக்கு உடவளவ மிருக வைத்தியசாலையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்தன.

காட்டுப் பன்றிகளிடமிருந்து மரக்கறிப் பயிர்களைப் பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே 7 வயதுடைய 6 அடி நீளமுடைய ஆண் கரும்புலி சிக்கியிருந்த நிலையில் பிடிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரியவகையான புலியொன்றே பிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்ததாகவும், குறித்த கரும்புலி பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கினம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிட்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 405 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட 403 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் டீராந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டடிருந்த கடற்படையினர் நேற்று இந்த கஞ்சா தொகையினை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா...

தொடர் 6 வெற்றிகளை பெற்று LA LIGA கால்ப்பந்து தரவரிசையில் Real Madrid தொடர்ந்தும் முதலிடம்

ஸ்பெயினின் நடைபெற்று வருகின்ற LA LIGA கால்ப்பந்து தொடரில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி தொடர் 6 வெற்றிகளை பெற்று தரவரிசையில் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் Getafe...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷான் மஹ்மூட் குரேஷி (shan mahmood qureshi) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பாக்கிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறப்பு...