கொரோனா வைரஸ் பரவல் காராணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கானகால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
தொழில் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்தகால எல்லை இந்த மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொரோனாவைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் வியாபார நிறுவனங்கள் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான திட்டமொன்று தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய, பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிறுவன உரிமையாளர்கள் www.labourdept.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து தமது விபரங்களை பதிவிடுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு, கொரோனாவைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் ஒரு திட்டமாக முன்னெடுக்கப்பட்ட குறித்த செயற்றிட்டம் இந்த வாரத்துடன் நிறைவடையும் என தொழில் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ்பரவல் காராணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்தும் தமது தகவல்களைபதிவு செய்து வருவதால் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகதொழில் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.