மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொல்பொருள் இடங்களை அழிக்க முற்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை! பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை

- Advertisement -

நாட்டில் தொல்பொருள் மற்றும் வரலாற்று இடங்களை அழிப்பதற்கும் ஆக்கிரமிப்பதற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என   பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் மற்றும் வரலாற்று இடங்களை  தனிநபர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் அத்துமீறல்களிலிருந்து பாதுகாப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற  மேஜர் ஜெனரல்  கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார்.

- Advertisement -

அம்பாறை  மாவட்டத்தில் உள்ள முஹு து மகா விஹாராய மற்றும் தீகவாபி தொல்பொருள் பிரதேசத்திற்கான விஜயத்தின்போது பெளத்த மதகுருமார் மற்றும்   பிரதேசவாசிகளை  சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.,

நாட்டின் பல தொல்பொருள் மற்றும் வரலாற்று தளங்கள்  ஆக்கிரமிப்புக்கள்  தொடர்பாக   சமூக வலைத்தளங்களில் வௌியான செய்திகளுக்கு அமையவே இந்த விஜயம் அமைந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு செயலாளரின் இந்த விஜயத்தில்  கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும்  கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்ணாண்டோ ஆகியோர்  பங்கேற்றிருந்தனர்,

அத்துடன் தேசிய பாரம்பரிய இடங்களுக்கு  சேதங்களை ஏற்படுத்துவோரை  சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்  என இதன் போது   பாதுகாப்புச் செயலாளர்  கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார் .

நாட்டின்  பொக்கிஷங்களான தொல்பொருள் மற்றும் வரலாற்று தளங்கள்  எதிர்கால தலைமுறையின் நலனுக்காக இன, மத பேதமின்றி  பாதுகாக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு நகரின் பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்விநியோகத்தடை

கொழும்பு நகரின் பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி நாளை காலை 9 .00 மணிதொடக்கம்  கொழும்பு 1 முதல் 3 வரையும் மற்றும் கொழும்பு 7 முதல் 12...

இலங்கை கடற்பரப்பில் தமது நாட்டு மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கண்டனம்

இலங்கை கடற்படைப் படகில் மோதுண்டு  தமது நாட்டு  மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கண்டனம் வௌியிட்டுள்ளது,. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து  அந்த  நாட்டு வௌியுறவுத்துறை அமைச்சர் தமது அதிருப்தியை...

நுவரெலியா வலப்பனை பகுதியில் நில அதிர்வு

நுவரெலியா  வலப்பனை பகுதியை அண்மித்த பிரதேசங்களில் இன்று அதிகாலை 1.8 ரிக்டர் அளவிலான நில அதிர்வு  ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 அளவில் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க...

மலையக மார்க்கத்தில் ரயில் தடம்புரள்வு

மலையக ரயில் மார்க்கத்தில் ஹாலிஎல மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட பகுதியில் பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் ரயில் தடம் புரண்டுள்ளது குறித்த ரயில் இன்று அதிகாலை 5.45 க்கு பதுளையில் இருந்து கண்டி நோக்கி...

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி எச் எம் எம் நவாஸ் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில்ஜனாதிபதியினால்  இந்த விசேட குழு...

Developed by: SEOGlitz