கொரோனா அச்ச நிலைமையின் கீழ் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான விதிமுறைகள் சிலவற்றை அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,
அரசியற் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் கடமைகள் தொடர்பான விடயங்களும் அந்த நிபந்தனைகளில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது,
இதன் போது வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுதல்,வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஒன்று கூடுதல், வாக்களித்தல், வாக்ககெண்ணுதல் மற்றும் வாக்குச்சாவடிகளை கண்காணித்தல் ஆகியவற்றின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளும் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது,
அத்துடன் இடைவௌியை பேணுதல், வாக்களிப்பிற்கு முன்னர் விரல்களில் மை பூசாமல் ஸ்ப்ரே மூலம் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளல், வாக்கு சேகரிப்புக்கு செல்லும் போது ஐந்து பேருடன் மாத்திரம் செல்லுதல் மற்றும் பிரசார துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதை தவிர்த்தல் போன்றவையும் இதில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது,
எவ்வாறாயினும் அரசியற்கட்சிகளின் அனுமதியின் பின்னரே தேர்தல்கள் ஆணைக்குழு இவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,