தென் கொரியாவில் இருந்து நாடுதிரும்பிய இலங்கைய பிரஜைகள் மீண்டும் தென் கொரியா செல்வத்றகு விசேட விமானம் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தென் கொரியாவில் இருந்து விடுமுறை நிமித்தம் நாடு திரும்பிய பணியாளர்களுக்கான குறித்த விசேட விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இவ்வாறு தென்கொரியாவுக்கு பயணிக்க விரும்புவோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது அவசியம் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.