கொழும்பு துறைமுகத்தில் தற்போதைய நிலையில் தரையிறக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் உள்ள பொருட்களை வெளியேடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நிவாரண கால எல்லை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கால நீடிப்புக்கான தண்டப்பனம் இன்றி குறித்த பொருட்களை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த நிவாரண காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த நிவாரண காலப்பகுதி எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நிறைவடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு துறைமுக வளாகத்தில் இருந்து பொருட்களை வெளியடுப்பதற்காக பணம் அறவிடும் நடைமுறை மீளவும், எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக துறைமுக அதிகாரசபையின் தலைவர் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.