ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தபால் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மூன்றில் ஒரு பகுதி பணியாளர்களுடன் தமது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பாலான பணியாளர்கள் சேவைக்கு திரும்ப முடியாது உள்ள நிலையில், கடிதங்கள்மற்றும் பொருட்கள் இதுவரை நூறு வீதம் விநியோகிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
இதன்படி, நாளாந்தம் தமது சேவைகள் முன்னெடுக்கப்படாத காரணத்தினால் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கடிதங்கள் நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக அஞ்சல் வழங்குவதில் அரச நிறுவனங்கள்மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் அத்துடன், சாதாரண நாட்களில், நாளாந்தம்1.3 மில்லியன் கடிதங்களையும், பொதிகளையும் விநியோகிப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித்ஆரியரத்ன மேலும் கூறியுள்ளார்.