மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்த முதியவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

- Advertisement -

முல்லைத்தீவு  –  கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில்  உயிரிழந்த இரண்டு முதியவர்களின் சடலங்களும் முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் தகனம்செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, நேற்று இரவு 11.30 அளவில் அவர்களிடன் சடலங்கள் தகனம் செய்யப்பட்டதாகஎமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முதியவர்கள் இருவர் நேற்று முந்தினம்  உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில்,  உயிரிழந்தவர்களில்  80 வயதுடைய குணசிங்கபுர பகுதியை சேர்ந்த ஒருவருக்குகொரோனா தொற்று இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்திய நிலையில் சடலத்தை முல்லைத்தீவு குமாரபுரம் மாவடிப்புலவு இந்து மாயானத்தில் எரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கமைய,  நேற்று மாலை 4 மணியளவில் முள்ளியவளைபொலிஸார் வைத்தியசாலை பிரேத அறையில் இருந்து சடலத்தை வாகனத்தில் ஏற்றிய பின்னர் வைத்தியசாலை நிர்வாகத்தினரையும் இறுதிக்கிரிகைகள் நடைபெறும் இடத்துக்கு வருமாறு  அழைத்துள்ளனர்.

எனினும், அவர்களை அழைப்பதற்கான நீதிமன்ற உத்தரவு இல்லாத நிலையில் சுமார் இரண்டுமணிநேரமாக சடலம் ஏற்றிய வாகனம்,  வைத்தியசாலை வளாகத்தில் இருந்தது.

இதனைத்தொடர்ந்து அந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சடலம் எடுத்து செல்லதயாரான போது முல்லைத்தீவு இளைஞர் குழு ஒன்று வருகைதந்து உடலத்தை எரிப்பதற்கு தடை விதித்தது  மின்சார சுடுகாடு இங்கு இல்லை எனவும், தமது  பாதுகாப்பை கருதி சடலத்தை வவுனியாவில் உள்ள மின்சார சுடுகாட்டில்  ஏரிக்குமாறும் கோரிக்கைவிடுத்திருந்தனர்.

இதனையடுத்து, குறித்த முதியவரின் உடலம் நேற்று இரவு களிக்காடு காட்டு பகுதியில்  கொண்டு செல்லப்பட்டு எரிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன.

இதேவேளை, உயிரிழந்த மற்றய முதியவருக்குகொரோனா தொற்று இல்லை என பெறுபேறு கிடைக்கப்பெற்ற நிலையில் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு அவரது உடலமும் கொண்டுவரப்பட்டு இரண்டு உடலங்களும் நேற்று இரவு  11.30 அளவில் தகனம் செய்யப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் மேலும் சில பகுதிகள்..!

நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்துருவ பகுதியைச் சேர்ந்த துந்துருவ கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளே இவ்வாறு...

கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படமாட்டாதா?- ரணில் விளக்கம்

கொரோனா தொற்று பரவல் இந்த வருடத்துக்குள் முடிவுக்கு வரும் என தான் கருதவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த...

எதிர்வரும் 21ஆம் திகதி விமான நிலையங்கள் திறக்கப்படுமா?

எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டின் விமான நிலையங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான சுகாதார நடைமுறைகளை சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அனைத்து நாடுகளினதும் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும்...

அலி சப்ரியை பதவி நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்..!

நீதி அமைச்சர் அலி சப்ரியை பதவி நீக்குமாறு கோரி இன்றைய தினம் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. சட்டத்தரணிகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளாக நியமிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவை பத்திரம் முன்வைத்துள்ளமையை கண்டித்து...

தாதியர்களுக்கான பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்த விசேட அறிவித்தல்!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தில் இந்த வருடம் திருத்தம் ஏற்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...

Developed by: SEOGlitz