ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கொள்வனவுகள் மற்றும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் 1 மற்றும் இரண்டு ஆகிய இறுதி இலக்கத்தை கொண்டவர்கள் இன்று வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு . கம்பஹா, புத்தளம் , களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.