மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் நிதியுதவிகள்!

- Advertisement -

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட ‘இட்டுகம ‘ எனும் சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு ஆயிரத்து 136 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த நிதியத்திற்கு SPAS எனும் தனியார் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை நேற்று  கையளிக்கப்பட்டது.

குறித்த காசோலை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கான ஆதரவை வழங்குதல் மற்றும் பலப்படுத்துதல் நடவடிக்கைகளுக்காகவும், அதனுடன் தொடர்புடைய சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நிதியத்தின் மூலம் கொரோனா தொற்று பரவலினால் ஏற்பட்டுள்ள முக்கியமான சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் சுகாதார அவசர நிலைகளுக்காக இலங்கையை நீண்டகால நோக்கில் தயார்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதியத்துக்கு வைப்பு செய்யப்படும் நன்கொடைகளுக்கு வரி மற்றும் அந்நிய செலாவணி விதிமுறைகளில் இருந்து விலக்களிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், காசோலை மற்றும் தந்தி பரிமாற்றம் மூலம் இந்த நிதியத்துக்கு நன்கொடை வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாவையின் தலைமைத்துவ பலவீனமே தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியது : சிவகரன்!

மாவை சேனாதிராஜாவினுடைய தலைமைத்துவ பலவீனமே இன்று தேர்தலில் பாரிய தாக்க நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானம்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வை எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அமர்வு ஆரம்பமாகும் நேரம் குறிப்பிடப்பட்ட வர்த்தமானி...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது நபர் ஒருவரை பணம் கேட்டு அச்சுறுத்தியமை மற்றும் நபர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மாலக்க சில்வா...

புதிய அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனஞ் செலுத்த வேண்டியவை!

புதிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இரண்டு விடயங்கள் குறித்து விசேட கவனஞ் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பான விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 638 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2...