ஐரோப்பிய நாடுகளில் இருந்த நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில் வஸ்கடுவ மற்றும் வாதுவ சுற்றுலா ஹோட்டல்களில் தங்கியுள்ள சுமார் 86 பேருக்கு பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பி சி ஆர் அறிக்கைகள் இன்று கிடைக்கப்பெறவுள்ளதாக களுத்துறை பொது வைத்தியசாலையின் வைத்தியர் நிஷாந்த ஹிரிமுத்துகொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவர்களுள் இந்திய சுற்றாலப்பயணிகள் உள்ளடங்குவதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நாட்டிற்கு வருகைதந்துள்ள குறித்த சுற்றுலாப்பயணிகள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய அவர்களுக்கான தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக களுத்துறை பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.