மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற வானிலை : இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

- Advertisement -

17 கிராம சேவகர் பிரிவுகளில் 2055 குடும்பங்களை சேர்ந்த 7929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலணி லொக்குபோதாகம தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம், காற்று, மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக அம்மாவட்டத்தில் 17 பிரதேச செயலகப் பிரிவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

- Advertisement -

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே மாவட்ட செயலாளர் மாலணி லொக்குபோதாகம இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ‘இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை, ஓப்பநாயக்க, எஹலியகொடை, அயகம, எம்பிலிபிட்டிய, இரத்தினபுரி, காவத்தை, கிரியெல்ல, கலவான, எலபாத்த, நிவித்திகல, இம்புல்பே, பலாங்கொடை, கொலோன்ன, வெலிகபொல, குருவிட்ட, கொடக்கவெல போன்ற 17 பிரதேச செயலகப் பிரிவுகளிலே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் 575 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளதுடன் அதில் 150 கிராம சேவகர் பிரிவுகளில் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

மேற்படி அனர்த்தங்கள் காரணமாக 2055 குடும்பங்களை சேர்ந்த 7929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட 2055 குடும்பங்களில் 1345 குடும்பங்களை சேர்ந்த 5507 பேர் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்தவர்களாவர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் இரத்தினபுரி பிதேச செயலக பிரிவை சேர்ந்தவரும் மற்றவர் பெல்மதுளை பிரதேச பிரிவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தில் 06 வீடுகள் முழுமையான சேதமடைந்துள்ளதுடன், பகுதியளவில் 409 வீடுகள் சேதமாகியுள்ளன.

இம்மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 131 குடும்பங்களை சேர்ந்த 447 பேர் தத்தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளார்கள்.

மேலும் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 255 குடும்பங்களை சேர்ந்த 1031 பேர் 19 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் பிரதேச செயலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன’ என இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலணி லொக்குபோதாகம மேலும் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...

சச்சின் டெண்டுல்கர் மகனுக்காக என்ன செய்தார் தெரியுமா!

உலகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது மகனுக்கு முடிவெட்டும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் Summer time.. And who doesn’t...

ராஜ நாகத்தை குழந்தை போல குளிர்பாட்டும் இளைஞன்: காணொளி உள்ளே!

இந்தியாவில் அதிக விசத்தன்மைக்கொண்ட ராஜ நாகம் ஒன்றை குழந்தையை போல குளிர்ப்பாட்டி விடும் இளைஞர் ஒருவரின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது இந்த காணொளியை பார்த்த வனத்துறை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர் One great survival technique...

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 769 ஆக உயர்வடைந்துள்ளது. இதனடிப்படையில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 15 பேர் குணமடைந்துள்ள நிலையில் 15 பேரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைவாக கொரோனா தொற்றிலிருந்து...

திருநீறு அணிவதன் நோக்கம் !

இந்துக்களின் மகிமை சொல்லும் விடயங்களில் விபூதியும் ஒன்றாகும். இதனை பகவத்கீதையில் யோகம் என்று புகழ்கிறது. நோய் தீர்க்கும் மருந்துகளில் ஒன்றாகவும் திருநிறு காணப்படுகிறது இதனையே மந்திரமாவது நீறு என்று தொடங்கும் தேவாரம் எடுத்துக்காட்டுகிறது. விபுதியை வடக்கு அல்லது...