மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனி உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி விதிப்பு!

- Advertisement -

இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தகரத்திலடைக்கப்பட்ட மீன், பேரீச்சம்பழம்,பருப்பு,சீனி, வெள்ளைப் பூண்டு உள்ளிட்ட பொருட்களுக்கே இவ்வாறு வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தோடம்பழம்,எலுமிச்சை,திராட்சை மற்றும் அப்பிள் ஆகியவற்றுக்கான தீர்வைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

அத்துடன் யோகட்,செத்தல் மிளகாய்,வேர்க்கடலை ஆகியவற்றுக்கான வரிகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படவுள்ளன.

கொரோனா தொற்றுக் காரணமாக அண்மையில் பருப்பு மற்றும் தகரத்திலடைக்கப்பட்ட மீன்,முட்டை ஆகியவற்றின் விலைகள் பிரதமரின் ஆலோசனையின் பேரில் குறைக்கப்பட்டிருந்தன.

எனினும் தற்போது அவற்றின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அத்தியவசியப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு இடமளிக்க மாட்டேன் : ஆளுநர் சாள்ஸ்!

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகள் உள்ளிட்ட வடக்கின் அமைதியான நிலைமைகளை குழப்பியடிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் பிஸ்.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்கள் விடுப்பில் செல்வதற்கான அனுமதி கோரியமை, உட்பட அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள்...

சிறுபோகச் செய்கைக்காக மன்னார் கட்டுக்கரைக்குளம் திறப்பு!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் விநியோகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர்...

தொண்டமான் மறைவு : வேட்பாளர் வெற்றிடம் குறித்து தேர்தல் திணைக்களம் விளக்கம்!

தேர்தலொன்றை நடத்தும் நோக்கத்துக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கெடுப்புக்கு முன்னதாக, குறித்த வேட்பாளர் மரணித்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல்கள் சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின்...

யாழ். கொட்டடி மீன் சந்தையினை மீளத் திறக்குமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையினை மீளவும் மக்கள் பாவனைக்கு திறந்து விடுமாறு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தாக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டு மீண்டும்...

யாழில் கிளைமோர் வெடிப்புச் சம்பவம் : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயம்!

வடமராட்சி கிழக்கில் வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸாரை இலக்கு வைத்து பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் வெடித்ததால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் மணல் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் வடமராட்சி கிழக்கு...