கொழும்பு சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றில் சிறு குற்றங்களின் அடிப்படையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 150 கைதிகளை பூஸா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட 40 கைதிகள் எதிர்வரும் இரண்டுவார காலப்பகுதிக்குள் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு பயிற்சி நடவடிக்கைகள் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.