மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிசுவை மலசலக்கூடக் குழிக்குள் வீசிய பெண் கைது

- Advertisement -

சிசுவொன்றை மலசலக்கூடக் குழிக்குள் வீசிய பெண்ணொருவர் அச்சுவெலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

குறித்த பெண் நான்கு நாட்களுக்கு முன்னர் குழந்தை பிரசவித்துள்ளதாகவும், இவ்வாறு பிரசவித்த குழந்தையை தமது வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலக் கூடக் குழிக்குள் வீசியதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு மலசலக் கூடக் குழிக்குள் வீசப்பட்ட குழந்தையின் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீச அயலவர்கள் இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவெலி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்ப இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், குறித்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மதுபான சாலைகள் குறித்து அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை  முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 5 மற்றும் ஆறாம் திகதிகளில் அனைத்து...

கெப்பிட்டல் தொலைக்காட்சியின் இன்றைய காலை நேர பிரதான செய்திகள் | 07:30 | 30.05.2020

மறைந்த இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்றையதினம் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் கிரிக்கட் சுற்றுத்தொடர்கள்

2020 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கிரிக்கட் போட்டித்தொடர்களுக்குரிய மீள் திருத்தப்பட்ட முழுமையான நேர அட்டவனையை அவுஸ்திரேலிய  கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது அவுஸ்திரெலியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா...

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...

மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி….

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  சுகாதாச அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...