மெய்ப்பொருள் காண்பது அறிவு

சவால்கள் கடந்து சாதிக்கும் உழைப்பாளர்களை பெருமையுடன் போற்றுவோம்…!

- Advertisement -

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்.

எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர பொழுதுபோக்கு, எட்டு மணிநேர ஓய்வு என்பவற்றை தொழிலாளர் உரிமைகளாக வென்றெடுத்த தினம் தான் இந்த நாள்.

- Advertisement -

1890ஆம் ஆண்டுகளில் இருந்து கொண்டாடப்பட்டு வரும் தொழிலாளர் தினத்தின் இன்றைய நிலை என்ன?

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்த தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் அடிப்படை நோக்கங்களின் இன்றைய நிலை என்ன?

இன்று எல்லா தொழிலாளர்களுக்கும் 8 மணி நேர வேலை என்ற உரிமை கிடைக்கிறதா?

தொழிலாளர்கள் சுரண்டப்படாமல் அவர்களுக்கான உரிமைகள் தொழில் தருநர்களால் வழங்கப்படுகின்றனவா?

இன்றைய நாளில் எமது நாட்டைப் பொறுத்தவரை தமது அரசியல் கட்சியின் பலத்தைக் காட்டும் ஒரு நாளாக மே தினம் மாறியிருக்கிறது.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் கட்சிகளுக்கு உறுப்பினர்களை இணைக்கும் இடமாக மாறிப் போயிருக்கின்றன.

1800களில் தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டு அடிமைகளாய் வேலை வாங்கப்பட்டனர்.

ஆனால் இன்று தாம் நவீன அடிமைகளாய் மாற்றப்பட்டிருப்பதை உணராமல் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆகவே, தொழிலாளர் தினத்தின் உண்மையான இலக்குகளை மையமாக வைத்துதான் இந்த நாளை நாம் கொண்டாடுகிறோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வேலை என்பது நம் வாழ்வின் ஒரு அங்கம். அதனை மாற்ற முடியாது. ஆனால் வாழ்க்கைக்காகத்தான் வேலையே தவிர, வேலைக்காக வாழ்க்கை அல்ல.

20 வயதில் உழைக்க ஆரம்பிக்கும் நாம், 60 வயதில் களைத்து ஓய்ந்து, திரும்பிப் பார்க்கும் போது வாழ்க்கையில் ஒரு வெறுமைதான் காணப்படும்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருமே தொழிலாளர்கள் தான். பொருத்தமான தொழிலைத் தெரிவு செய்வதும் வாழ்வதற்காக தொழில் புரிய வேண்டியதும் நாம் இன்றைய நாளில் நினைவு கொள்ள வேண்டிய விடயங்களாகின்றன.

இதேவேளை, இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தாக்கத்தினால் பலரது தொழில்கள் முடங்கிப் போயிருக்கின்றன.

உலக நாடுகளின் தொழிற் துறை கடுமையான சரிவை எதிர்நோக்கியிருக்கிறது.

இதை சரி செய்ய வேண்டியது தொழிலாளர்களாகிய நம் ஒவ்வொருவரினதும் கைகளில் தான் இருக்கிறது.

நம் ஒவ்வொருவரினதும் உழைப்பு தான் கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை தூக்கிநிறுத்தும் மாபெரும் சக்தியாக இருக்கப் போகிறது.

அத்துடன், இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துக் களத்தில் போராடும் தொழிலாளர்களை நாம் நினைவு கூரக் கடமைப் பட்டிருக்கிறோம்.

மருத்துவர்கள், தாதியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள், சுகாதார அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர், தன்னார்வலர்கள், ஊடகவியலாளர்கள் என களத்தில் நிற்கும் ஒவ்வொருவரும் இன்றைய நாளில் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.

ஆகவே, இன்றைய நாளை கொரோனா தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக அர்ப்பணிப்பதுடன், எதிர்காலத்தில் தொழிலாளர் தினத்தின் உண்மையான நோக்கத்தை அடைய பாடுபடும் ஒரு நாளாக நாம் மாற்றுவோம்.

உலகின் அத்தனை தொழிலாளர்களுக்கும் எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவின் தொழிலாளர் தின நல் வாழ்த்துகள்!!!

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கைக்குண்டு வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் காயம்!

வவுனியா, இரணை இலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கமைய, குறித்த சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே...

அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்த சூடான் அரசியல் கட்சிகள்!

இஸ்ரேலுடன் சுமூகமான உறவைப் பேணும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சூடான் அரசியல் கட்சிகள்  நிராகரித்துள்ளன. இந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியொன்று உறுவாக்கப்படுமென சூடான் அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர். நாடுகளுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர இணங்கியுள்ளதாக இஸ்ரேல்,...

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

Developed by: SEOGlitz