மெய்ப்பொருள் காண்பது அறிவு

சலூன்கள் மீண்டும் திறக்கப்படுகிறது?

- Advertisement -

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் ஆகியவற்றை மீளத் திறப்பதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆலோசனை வழங்கியுள்ளார்,

சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய அவற்றைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.,

- Advertisement -

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் அழகுக்கலை நிபுணர்களுக்கிடையே நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதன் முடி வெட்டுதல் உள்ளிட்ட அத்தியவசிய செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,

உரிய சுகாதார இடைவௌியை பின்பற்றி இதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,

அத்துடன் எதிர்வரும் நாட்களில் நிபந்தனைகள் அடங்கிய வழிகாட்டல் சுற்றிக்கையொன்று வௌியிடப்படும் என்பதுடன் அதன்பின்னர் சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்புடன்  அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் ஆகியவற்றைத் திறக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாளைமுதல் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகள்! விபரம் உள்ளே..

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. இதன்படி, ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நகர எல்லைகள் வரை...

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடல்!

மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் சீ.கே. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 85 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன்சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடைய 85 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான...

நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் விசேட இரயில் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான மார்க்கம், புத்தளம் மற்றும் களணிவெலி ஆகிய மார்க்கங்களிலான அனைத்து அலுவலக மற்றும் பயணிகள் ரயில்...

இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பொதுமக்களின் பாதுகாப்பினை  கருத்திற்கொண்டே  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும்  எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளர். இவ்விடயம் தொடர்பாக...

Developed by: SEOGlitz