மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்று : கெபிட்டலின் சிறப்புப் பார்வை!

- Advertisement -

புகைப்பிடிக்கும் பழக்கத்தின் காரணமாக, வருடாந்தம் 20 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தகவல் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மே 31ஆம் திகதியாகிய இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினமாகும்.

- Advertisement -

இதனையொட்டி வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புகைப்பிடிக்கும் பழக்கத்தின் காரணமாக, நாளாந்தம் 55 பேர் உயிரிழக்க நேரிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச ரீதியில், புகைப்பழக்கத்தினால், வருடாந்தம் 8 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அதேவேளை, அவர்களில் 9 இலட்சம் பேர் இரண்டாம் நிலை புகைத்தலினால் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக, இளைஞர்களும் சிறுவர்களும் இலக்குவைக்கப்படுவதாக, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

இதற்கிணங்க, இளைஞர்களை புகையிலை நிறுவனத்தின் பிழையான வழிகாட்டலில் இருந்து பாதுகாத்து, அவர்களின் பாவனையை தடுப்போம்’ எனும் தொனிப் பொருளில், 2020ஆம் ஆண்டிற்கான, சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் கொண்டாடப்படுவதாக, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைக் கட்டமைப்பில் இலங்கை உள்ளிட்ட 168 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

அத்துடன், சிறுவயதில் இருந்து பிள்ளைகளின் மனதில் புகைத்தல் தொடர்பான சாதகமான சிந்தனையொன்றை உருவாக்குவதற்காக, விற்பனை நிறுவனங்களினால் பல்வேறு நுணுக்கமான முறைகள் கையாளப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளைஞர்களும், சிறுவர்களும், போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாவதைத் தவிர்ப்பதற்காக, 6 பரிந்துரைகள், மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

புகைத்தல் பொருட்களின் தனி விற்பனையை தடை செய்தல், கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீற்றர் வரை புகைத்தல் பொருள் விற்பனையை தடை செய்தல், புகைத்தல் பொருட்களுக்கு அதிக பட்ச விலையை நிர்ணயித்தல், வெற்றுப் பொதியிடல் முறைமை, தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுத்தல் மற்றும் அவற்றின் மீது நடவடிக்கை எடுத்தல் ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, புகைத்தலினால் எமது சமூகம் பாதிப்படைவதைத் தடுக்க நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்பதை எமது கெப்பிட்டல் செய்திகள் வலியுறுத்துகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ் மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவால் தாமும் தமது...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்கள்!

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய...

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் இரண்டு வைத்தியசாலைகள்!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கம்பஹா  மாவட்டத்தின் மேலும் இரண்டு வைத்தியசாலைகள் நிறுவப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள்  பணிப்பாளர்  தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ்  கண்காணிக்கும் வகையில் குறித்த...

அரசியலமைப்பு  திருத்தத்தில்  சபாநாயகர் கையெழுத்திட்டார்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல  இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்20ஆவது திருத்தம் இன்றையதினம் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில்  சபாநாயகர்  அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை...

சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் மீட்பு!

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்களை   சவளக்கடை பொலிசார்  மீட்டுள்ளனர். மோட்டர் சைக்கிளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக  பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனையில் குறித்த மதுபானம் கைப்பற்றப்பட்டதாக...

Developed by: SEOGlitz