மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச கப்பற்துறை கம்பனிகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு – ஜனாதிபதி கவனம்

- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக உலகின் முன்னணி நாடுகள் பலவற்றின் கப்பற்துறை கம்பனிகளில் ஏற்பட்டுள்ள ஊழியர் வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பக்கூடிய வாய்ப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், தெற்கு கடல் மார்க்கமாக கிழக்கு மற்றும் மேற்கிற்கு பயணம் செய்யும் உலக நாடுகளின் கப்பல்களில் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு காலி துறைமுகத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்குமான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய கப்பல்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, காலி துறைமுகத்திற்கு 10 கடல் மைல் தூரத்தில் உள்ள கடற்பரப்பில் தினமும் 300 இற்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் பயணிப்பதாக கம்பனிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் கப்பல்களில் சேவையில் ஈடுபட்டுள்ள ஏனைய நாடுகளின் பணியாளர்களை இலங்கையிலிருந்து தமது நாடுகளுக்கு பயணிப்பதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியைப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கன் விமானச் சேவையை மேம்படுத்தவும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உலகின் கப்பல் துறை தொழில்களில் 16 இலட்சம் பேர் உள்ளதாகவும் இவர்களில் 16 ஆயிரம் பேர் இலங்கையர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பணியாற்றும் இலங்கையர்கள் வருடமொன்றுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு ஈட்டித்தருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தொகையை இரு மடங்காக அதிகரிப்பதன் மூலம் அந்நியச் செலாவணி வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தரமான உயர் நியமங்களுடன் கூடிய சேவையை வழங்கக் கூடிய வாய்ப்பு குறித்த நம்பிக்கையை உலக கப்பல் கம்பனிகளுக்கு உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கப்பல்களில் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, கடற்படைத் தளபதி பியல் டி சில்வா, துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக மற்றும் நாட்டின் முன்னணி கப்பல்துறை நிறுவனங்களின் தலைவர்களும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சீரற்ற வானிலை: 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு…!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கிழக்கு மாகாணத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில்...

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்…!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மின்னான, போபத்தெல்ல, வெலேகொட, அஸ்கஹுல மற்றும் யகுதாகொட...

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது..!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 695 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பேலியக்கொடை கொரோனா...

பசறையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

பசறையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பசறை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இவர்கள் கொழும்பில் பணிபுரிபவர்களென்றும், பொங்கல் விடுமுறைக்காக கிராமத்திற்கு வருகைதந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தொற்றாளர்கள் கோணக்கலை...

மகர ராசி நேயர்களே அலுவலக பணிகளில் இன்று கூடுதல் கவனம் தேவை..!

மேஷம் - மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான இன்று முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு...

Developed by: SEOGlitz