மெய்ப்பொருள் காண்பது அறிவு

சம்மாந்துறையில் கஞ்சாவுடன் கைதான பெண்!

- Advertisement -

கஞ்சாவுடன் கைதான 26 வயதுடைய பெண்ணிற்கு ரூபா 19900 தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிமன்று விடுவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (12) மாலை 4 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிக்கிராமம் பகுதியில் 26 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் துர்நடத்தை தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் உள்ளிட்ட குழுவினர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் புதன்கிழமை(13) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

- Advertisement -

இவ்வாறு ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பெண்ணிற்கு ரூபா 19 ஆயிரத்து தொள்ளாயிரம் தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட குறித்த பெண் 108 கிராம் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

க.பொ.த. உயர்தரப்பரீட்சை ஓகஸ்ட் மாதம் நடத்தப்படுமா?

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து, கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மூடப்பட்டன. இந்த...

கட்டாரிலிருந்து 235 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கைப் பிரஜைகள் 268 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, அவர்கள் கட்டாரின் தோஹா நகரிலிருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL - 218 எனும்...

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது!

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4.00 மணிவரையான ஆறு மணித்தியால காலப்பகுதியிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய,...

பிரித்தானியாவில் ஜூன் 15 முதல் அத்தியாவசிய வணிக நிறுவனங்களை திறப்பதற்கு தீர்மானம்

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி முதல் அத்தியாவசிய வணிக நிறுவனங்களை திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். இதேவேளை ஜூன் 8-ம் திகதி...