மெய்ப்பொருள் காண்பது அறிவு

சக்தி மிக்கதாக உருவெடுக்கும் அம்பன் சூறாவளி!

- Advertisement -

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டிருந்த தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றம் பெற்றுள்ளது.

அம்பன் என அழைக்கப்படும் இந்த சூறாவளி இன்று காலை 8.30 அளவில் உருவெடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணக்கள் அறிவித்துள்ளது.

- Advertisement -

அம்பன் சூறாவளியானது திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் 610 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் அம்பன் சூறாவளியானது சக்திவாய்ந்ததாக மாறுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்பன் சூறாவளியானது தற்போது நிலைகொண்டுள்ள பகுதியில் இருந்து, இடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் வடக்கு நோக்கி நகருமென எதிர்வு கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதி அன்று அம்பன் சூறாவளி தனது திசையை மாற்றி மேற்கு வங்காள கரையை நோக்கி பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பன் சூறாவளியின் காரணமாக நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிற்கு மேலாக காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தென், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணக்கள் அறிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்களை ஆராயும் குழு நியமனம்!

20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த குழு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புவகேன அலுவிகாரே,...

Glasgow பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி…

ஸ்கொட்லாந்தின் Glasgow பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 600 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த மாணவர்களுள் 172 பேருக்கு...

உங்களுக்கு மாற்று யாரும் கிடையாது- டி. இமான்….

தமிழ் சினிமாவின் பாடகர் டி.இமான் "நாங்கள் அனைவரும் உங்களை இழக்கின்றோம்" என தனது ஆழ்ந்த இரக்கங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். We Miss You SPB Sir.#Annaatthe#RIPSPB pic.twitter.com/08gNLOsUsO — D.IMMAN (@immancomposer) September...

எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர் SPB – ஹரிகரன் இரங்கல்.

It is so tragic, the most unfortunate happening. SPB sir was a humble & helpful human being. He was one of the most phenomenal...

வெற்றியின் குரல்- ஏ.ஆர். ரஹ்மானின் அனுதாபங்கள்………

பாடகர் ஏ.ஆர். ரஹ்மான் "வெற்றியின் குரல் அன்பு, பக்தி மகிழ்ச்சி" எனக்கூறி தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். The Voice of Victory,Love,Devotion and Joy! #RIPSPBalaSubramanyam pic.twitter.com/nd3H8oRcnO — A.R.Rahman (@arrahman) September 25, 2020

Developed by: SEOGlitz