மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் 5 இலட்சம் கடிதங்கள் தேக்கம்!

- Advertisement -

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக, கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் 5 இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக தபால்கள் விநியோகிக்கப்படாமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

- Advertisement -

அத்துடன், இதுவரையான ஊரடங்கு காலப்பகுதியில், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலானோர் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக தபால் திணைக்கள தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும், நாளை முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதன் காரணமாக, அதிக அளவானோரை சேவைக்கு இணைத்துக் கொள்ள முடியும் என்பதால், தேங்கியுள்ள கடிதங்களை, விரைவாக விநியோகிக்க முடியும் என தபால் திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மட்டக்களப்பு – அரசடி பகுதி தனிமைப்படுதலில் – காத்தான்குடியில் சில பகுதிகள் விடுவிப்பு.

காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சில கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கபட்டுள்ளன. இதேபோன்று, பண்டாரகம அட்டுலுகம பகுதியின், எபிட்டமுல்ல கிராமசேவகபிரிவு, மற்றும் பமுனுமுல்ல கிராமசேவகபிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ன. அத்துடன், மொணராகலை படல்கும்புர அலுபொத்த பிரதேசமும்...

பாடசாலைகளில் முறையான சுகாதார பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு

பெப்ரவரி மாதம்  மேல் மாகாணத்தின் அனைத்து  பாடசாலைகளும்  மீளதிறக்கப்படுவதற்கு முன்பதாக  கடுமையான சுகாதார பாதுகாப்பு திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள...

நாட்டின் பல பகுதிகளிலும் 18 பேர் கைது -காரணம் இதோ!

மேல்மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில்  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட  மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை...

பசறையில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று

பசறை பிரதேசத்தில்  பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி  கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளங் காணப்பட்டனர். இதனையடுத்து குறித்த இரு மாணவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி...

கண் வைத்தியசாலையில் 6  பேருக்கு கொரோனா தொற்று

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின்  பணியாளர்கள் 6  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாதியர்கள் இருவர், அலுவலக பணியாளர்கள் இருவர், பாதுகாப்பு அதிகாரி  மற்றும் வைத்தியசாலை சமையலறையின் உணவு தயாரிப்பாளர் என 6 பேர்...

Developed by: SEOGlitz