மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பிற்கு வரும் பயணிகளுக்காக புதிய பேரூந்து சேவைகள்!

- Advertisement -

அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி புதிய போக்குவரத்து ஒழுங்குமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இதன்படி பேருந்துகளில் கடமைகளுக்கு செல்லும் மக்களுக்காக அலுவலக பேருந்து சேவைகளை வழங்கும் புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனடிப்படையில், நாட்டின் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் கொழும்பிற்கு வருகைதரும் பயணிகளுக்காக குறித்த பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

குறித்த புதிய பேருந்து சேவைகள் இரத்தினபுரி, கேகாலை, சிலாபம், ஹம்பாந்தோட்டை, தங்கல்ல, மாத்தறை, காலி, அம்பலாங்கொடை, அலுத்கம, களுத்துறை, ஆகிய பகுதிகளில் இருந்து முன்னெடுக்கவுள்ளன.

மேற்படி பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் தம்மைப் பதிவு செய்து கொள்வதன் ஊடாக, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு மாதிரி விண்ணப்பமொன்றை தயாரித்து WORD அல்லது PDF முறையில் இலங்கை போக்குவரத்து சபைக்கான முகநூல் தளத்திற்கு Sri Lanka Transport Board – SLTB (https://www.facebook.com/officialSLTB/ ) அல்லது  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை போக்குவரத்து சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!

வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியின் தனியார் காணியொன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த, காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றை அதன் உரிமையாளர் சுத்தம்...

மீண்டும் மின் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார கட்டமைப்பு தொடர்பில் முறையற்ற திட்டங்கள் இல்லாத காரணத்தினாலேயே, மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக மின்சார சபையின் பிரதிப்...

IPL இன் இரண்டாவது போட்டி இன்று!

11 ஆவது இந்தியன் பிரிமியர் லிக் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அத்துடன், இந்த போட்டி டுபாயில் இன்று...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்பனை!

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தநிலை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தொடருமென தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குறிப்பிட்ட...

ஐ.தே.க வின் பொதுச் செயலாளர் பதவி துறக்க தீர்மானம்!

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதற்கு தான் இதுவரை தீர்மானிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கின்றார். எவ்வாறாயினும், கட்சியின் மேம்பாட்டுக்காக பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம்...

Developed by: SEOGlitz