மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கின…!

- Advertisement -

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகின்றது.

இதனையடுத்து மருதானை, அலுத்மாவத்தை, ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

- Advertisement -

இதனால் குறித்த பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படபட்டுள்ளது.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிரதேசத்திலும், அந்தமானின் தென் கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டள தாழமுக்கம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கிழக்கு கடற்பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

நாட்டின் தெற்கு ,மேல்,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது,

அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இரவு வேளைகளில் இடியுடன் மழை பெய்யும் சாத்திமுள்ளதாக தெரிவி்ககப்படுகின்றது.

மேல்மாகணம் மற்றும் தென் மாகாணத்தின் பல இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...

கொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்!

குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...

பாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்!

புகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...

எஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல்  அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம்  தாமரைப்பாக்கத்தில் உள்ள  அவரது பண்ணை இல்லம் பகுதியில்   ராணுவ  மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன்  72  குண்டுகள்...

Developed by: SEOGlitz