கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கடற்படை உறுப்பினர்களில்மேலும் 12 பேர் நேற்றைய தினம் குணமடைந்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் கொரோனாதொற்று இல்லை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஹோமாகமை, முல்லேரியா மற்றும் தேசிய தொற்றுநோய்வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை உறுப்பினர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கமைய, கடற்படை உறுப்பினர்கள்189 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது