மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றின் இன்றைய நிலைவரம்!

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 801 ஆக காணப்படுகின்றது.

இன்றைய தினம் மேலும்20 பேர் குணமடைந்துள்ள நிலையிலேயே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்றைய தினம் குணமடைந்தவர்களில் 15 கடற்படை உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கிக்கப்படுகிறது.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 74  பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 819  பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை 148 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை 91 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை 46 பேரும், இரணவில வைத்தியசாலை 50 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை 92 பேரும், இராணுவ வைத்தியசாலை 97 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலை 95 பேரும், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும்   கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,   கொழும்பு புறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை உறுப்பினர்களின் PCR பரிசோதனை முடிவுகள் இன்றையதினம் வெளியாகியுள்ள நிலையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கட்டிடத்தில் தங்கியிருந்த கடற்படை உறுப்பினர் ஒருவர் அண்மையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அந்தக் கட்டிடம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு அங்கு தங்கியிருந்த 220 கடற்படை உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்றைய தினமும் கொழும்பின் பல பகுதிகளில் பீ.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  நாடுமுழுவதும்  கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 63 ஆயிரத்து 935  பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

துப்பாக்கி சூட்டு சம்பத்தில் உயிரிழந்தவருக்கும் தனக்கும் எவ்வித பகையும் இல்லை

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு, தன்னுடன் எந்தவிதமான முறுகலும் இருக்கவில்லை எனவும், இது தொடர்பில் தவறான விடயங்கள் பரப்பபட்டுவருவதாகவும், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

Developed by: SEOGlitz