கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா வைரசுக்கான மருந்தை கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சிக்காகவும், பரிசோதனை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்காகவும் பிரித்தானியா கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் காணொளி மூலமான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ளசர்வதேச பொருளாதார பாதிப்பை சீர் செய்வதற்காகவும் குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தைகண்டு பிடிப்பதற்கு பெரிய அளவிலான ஆராய்ச்சி தேவைப்படுவதாகவும் மருந்தை அதிக அளவில்கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மனிதாபிமான அடிப்படையிலானஇந்த நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மேலும் கூறியுள்ளார்