அமெரிக்க விமான நிறுவனங்கள் ஊடாக பயணிக்கும் பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவினருக்கு புதிய சுகாதார விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கன் எயார்லைன்ஸ் மற்றும் டெல்டா விமான சேவையூடாக பயணிக்கும் பயணிகள் உள்ளிட்ட பணியாளர் குழுவினர் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கள்ளானவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 88 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளதுடன் 68 ஆயிரத்து 598 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.