மெய்ப்பொருள் காண்பது அறிவு

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்!

- Advertisement -

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் இன்று மாலைவேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டிற்கு மேலாக காற்றின் வேகமானது மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் தொடர்ந்துவரும் மழையுடனான வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த மாவட்டங்களில் உள்ள மலைபாங்கான பிரதேசங்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக மில்லக்கந்த பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

க.பொ.த. உயர்தரப்பரீட்சை ஓகஸ்ட் மாதம் நடத்தப்படுமா?

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து, கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மூடப்பட்டன. இந்த...

கட்டாரிலிருந்து 235 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கைப் பிரஜைகள் 268 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, அவர்கள் கட்டாரின் தோஹா நகரிலிருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL - 218 எனும்...

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது!

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4.00 மணிவரையான ஆறு மணித்தியால காலப்பகுதியிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய,...

பிரித்தானியாவில் ஜூன் 15 முதல் அத்தியாவசிய வணிக நிறுவனங்களை திறப்பதற்கு தீர்மானம்

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி முதல் அத்தியாவசிய வணிக நிறுவனங்களை திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். இதேவேளை ஜூன் 8-ம் திகதி...