மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்கிஸ்ஸ துப்பாக்கி சூடு சம்பவம் : ஒருவர் கைது!

- Advertisement -

கல்கிஸ்ஸ – சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் நேற்றிரவு எலுவில பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

34 வயதையுடைய அங்குலான, மொரட்டுவைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ சொய்சாபுர பகுதியில் உணவகமொன்றின் மீது கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடையாளந் தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், 2018 ஆம் ஆண்டில் கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்றைய தினம் கல்கிஸ்ஸை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இமயமலை எல்லையை தாண்டி இந்திய நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவர் திருப்பி அனுப்பி வைப்பு!

இமயமலைப் பகுதியில் எல்லை தாண்டி தமது நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவ சிப்பாய் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்த குறித்த சிப்பாய், நேற்று...

ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சீன வங்கிக் கணக்கானது Trump...

அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல்!

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் Mohammed bin Salman க்கு எதிராக அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபிய ஊடகவியலாளரான ஜமால் கஷோக்கியைக் கொலை செய்ய உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டி...

கொரோனா தொற்றின் அச்சம்: பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது

பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியானது தற்காலிகமான மூடப்பட்டுள்ளது. பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியில் தொழில்புரியும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே,  இந்த நடவடிக்கை முன்னெடுக்க்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முன்னெடுக்கபட்ட...

நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன்படி, குறைந்த பட்சம் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...

Developed by: SEOGlitz