மெய்ப்பொருள் காண்பது அறிவு

கனவு அணியில் இடம்பிடித்த லசித் மலிங்க!

- Advertisement -

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட கனவு அணியில் இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான லசித் மலிங்க குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இயன் பிஷப்பின் கனவு அணியிலேயே லசித் மலிங்க உள்வாங்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உடனான சமூகவலைத்த உரையாடலிலேயே அவர் தனது கனவு அணி குறித்த விபரங்களை தெரியப்படுத்தியுள்ளார்.

இயன் பிஷப் குறிப்பிட்ட கனவு அணியில் மூன்று இந்திய வீரர்களும், அவுஸ்ரேலிய வீரர்கள் இருவரும் மற்றும் தென்னாபிரிக்கா, இலங்கை, நியூஸிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தலா ஒருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த அணியில் இந்தியாவின் ரோஹித் ஷர்மாவும், அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மஹேந்திர சிங் தோனியை தனது அணியின் தலைவாரகவும் விக்கெட் காப்பாளராகவும் இயன் பிஷப் தெரிவு செய்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவின் மிச்செல் ஸ்டார்க், லசித் மாலிங்க தென் ஆபிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத்கான் சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார்.

இயன் பிஷப் கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு தனது கனவு அணியை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிட்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 405 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட 403 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் டீராந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டடிருந்த கடற்படையினர் நேற்று இந்த கஞ்சா தொகையினை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா...

தொடர் 6 வெற்றிகளை பெற்று LA LIGA கால்ப்பந்து தரவரிசையில் Real Madrid தொடர்ந்தும் முதலிடம்

ஸ்பெயினின் நடைபெற்று வருகின்ற LA LIGA கால்ப்பந்து தொடரில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி தொடர் 6 வெற்றிகளை பெற்று தரவரிசையில் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் Getafe...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷான் மஹ்மூட் குரேஷி (shan mahmood qureshi) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பாக்கிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறப்பு...