கண்டி அக்குரனை நகருக்குள் பிரவேசிப்பதற்கு வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய மாகாணத்தில் சில நோயாளர்கள் அக்குரணை பகுதியில் கண்டறியப்பட்டமையையடுத்து அந்தப்’ பகுதி முடக்கப்பட்டிருந்தது.,
அக்குரணை பகுதிக்கு அத்தியவசிய பொருட்களை கொண்டுவர வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்குரணை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்,
வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் அத்தியவசியப் பொருட்கள் வீதித் தடைகளில் வேறு வாகனங்களுக்கு மாற்றப்பட்டு அக்குரணை பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
எவ்வாறாயினும் அக்குரணை நகருக்குள் மாத்திரம் அத்தியவசிய சேவைகளுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவிக்கின்றார்,