மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடற்படையினருடன் தொடர்புடைய மேலும் 200 பேருக்கு பரிசோதனை!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது

- Advertisement -

அத்துடன், 526 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 133 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 51 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 78 பேரும், இரணவில வைத்தியசாலையில் 17 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 59 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 140 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் 33 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் இன்று காலை அடையாளம் காணப்பட்டதை அடுத்தே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இதேவேளை, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்திலேயே அதிக அளவிலானவர்கள் கொரோனாதொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 160 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 65 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பேரில் 179 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் 12 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவர்களில் 10 பேர் கடற்படை வீரர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கு ஶ்ரீறிப்பாக, கடற்படை வீரர்களுடன் தொடர்புடைய 168 பேருக்கு நேற்றைய தினம் PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த பத்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த நாட்களில் விடுமுறையில் வீடுகளுக்கு சென்றிருந்த கடற்படை வீரர்கள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வெலிஸர கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அவரோடு சேவையில் இருந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த காலப்பகுதியில் விடுமுறையில் வீடுகளுக்கு சென்றிருந்த கடற்படை வீரர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும், அவர்களுடன் தொடர்புடைய பலரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்ட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே கடற்படை வீரர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கடற்படை வீரர்களுடன் தொடர்புடைய மேலும் 200 பேருக்கு இன்று PCR பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர்ச்சியாக PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதன் ஊடாக கடற்படை வீரர்களுக்கிடையே கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஜா – எல பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய முதலாம் மற்றும் இரண்டாம் தரப்பு தொடர்பிலான தகவல்களை திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் கடற்படை வீரர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் தியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த திக்கல்பொத்த பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டது.

வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை வீரர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த கடற்படை வீரர் கடந்த 22 ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும், கடற்படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த கடற்படை வீரர் கடந்த 25ஆம் திகதி கடற்படை முகாமுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த கடற்படை வீரர் சுமார் 50 பேர் வரையில் தொடர்பை பேணி உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு குறித்த கடற்படை வீரருடன் தொடர்பைப் பேணியவர்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்டப்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இமயமலை எல்லையை தாண்டி இந்திய நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவர் திருப்பி அனுப்பி வைப்பு!

இமயமலைப் பகுதியில் எல்லை தாண்டி தமது நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவ சிப்பாய் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்த குறித்த சிப்பாய், நேற்று...

ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சீன வங்கிக் கணக்கானது Trump...

அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல்!

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் Mohammed bin Salman க்கு எதிராக அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபிய ஊடகவியலாளரான ஜமால் கஷோக்கியைக் கொலை செய்ய உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டி...

கொரோனா தொற்றின் அச்சம்: பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது

பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியானது தற்காலிகமான மூடப்பட்டுள்ளது. பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியில் தொழில்புரியும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே,  இந்த நடவடிக்கை முன்னெடுக்க்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முன்னெடுக்கபட்ட...

நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன்படி, குறைந்த பட்சம் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...

Developed by: SEOGlitz