ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினால் இலங்கைக்கு மீண்டும் ஒரு தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் எவ்வித நம்பகத்தன்மையும் அற்றது என இராணுவம் தெரிவிக்கின்றது.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக அரச முத்தரையிடப்பட்ட அறிக்கையாக பரப்பபட்டும் இந்த செய்தி குறித்து மக்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசூரிய எமது கெப்பிட்டல் நியூசுக்கு தெரிவித்தார்,
நாட்டின் பொருளாதார நிலையமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
ஏற்கனவே நாட்டில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.