மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவினை நிறுத்தத் தீர்மானம்!

- Advertisement -

ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்,தேர்தல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து அரசியல் தலையீடுகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...

மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி….

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  சுகாதாச அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...

மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 8 பேரும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்று தேசிய...

அங்கஜன் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், உரிய திகதியில் விண்ணப்பங்கள் அனுப்பமுடியாது...