உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குற்றப்பலனாய்வு திணைக்களத்தினர் உட்பட ஐவர் இன்று சாட்சியம் வழங்கவுள்ளனர்.
இதற்கமைய சாட்சியம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12 மணிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குற்றப்பலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் கட்டான பிரதேச செயலாளர் , நீர் கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இருவர் சாட்சி பதிவுகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாக ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
நாடடில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதன் காரணமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.