ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா – எபோட்சிலி தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, கழுகு கொத்தியதில் குளவிக் கூடு கலைந்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஆறு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.