நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்து 169 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் காலை 6 மணி முதல் இன்றைய தினம் காலை 6 மணி வரையான 24 மணிநேர காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் 314 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் 20 ஆம் திகதி பிற்பகல் 6 மணி முதல் இன்றைய தினம் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 46 ஆயிரத்து 284 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் 12 ஆயிரத்து 13 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.