ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், ஊரடங்கு உத்தரவுகளை மீறிய சுமார் 44 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 11 ஆயிரத்து 460 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலையில் கொழும்பில் தங்கியிருந்த 370 பேர், தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் கர்ப்பிணி பெண்கள், நீண்ட கால நோயாளிகள் மற்றும் சிறு குழந்தைகளும் உள்ளடங்கியிருந்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, 23 மாவட்டங்களைச் சேர்ந்த குறித்த நபர்கள் பேலியகொடை விஜய குமாரதுங்க அரங்கிலிருந்து, தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.