மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் ஆயிரத்து 710   பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேலும் 557   வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

- Advertisement -

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணிதொடக்கம் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் 64 ஆயிரத்து 387  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 18ஆயிரத்து 169  வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களுள் 20  ஆயிரத்து 497  பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் ஏழாயிரத்து 934   பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேல்மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் சாத்தியம்? : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

மேல்  மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்று மாணவர்களுக்காக 907 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்ப்ட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. சர்வதேச உறவுகள் இராஜாங்க அமைச்சரான தாரக பாலசூரியவின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் கொரோனா  தொற்றுக்குள்ளான நபர்...

ஸ்பெயினில் பாரிய வெடிப்புச் சம்பவம் : இருவர் உயிரிழப்பு!

ஸ்பெயினின் மாட்றிட் நகரில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எரிவாயு கசிவால் ஏற்பட்ட குறித்த வெடிப்புச் சம்பவத்தால் பல கட்டடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த வெடிப்புச் சம்பவத்தினையடுத்து...

நெடுந்தீவில் விபத்திற்குள்ளான இந்திய மீனவர்கள் சடலமாக மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரால் இன்று மாலை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார்...

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு : ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 389 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 187 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை 53 வயதான...

Developed by: SEOGlitz