மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 668 பேர் கைது!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 668 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேலும் 248 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

- Advertisement -

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணிதொடக்கம் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் 61 ஆயிரத்து 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 ஆயிரத்து 172 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களுள் 17 ஆயிரத்து 949 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் ஆறாயிரத்து 706 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு இடமளிக்க மாட்டேன் : ஆளுநர் சாள்ஸ்!

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகள் உள்ளிட்ட வடக்கின் அமைதியான நிலைமைகளை குழப்பியடிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் பிஸ்.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்கள் விடுப்பில் செல்வதற்கான அனுமதி கோரியமை, உட்பட அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள்...

சிறுபோகச் செய்கைக்காக மன்னார் கட்டுக்கரைக்குளம் திறப்பு!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் விநியோகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர்...

தொண்டமான் மறைவு : வேட்பாளர் வெற்றிடம் குறித்து தேர்தல் திணைக்களம் விளக்கம்!

தேர்தலொன்றை நடத்தும் நோக்கத்துக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கெடுப்புக்கு முன்னதாக, குறித்த வேட்பாளர் மரணித்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல்கள் சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின்...

யாழ். கொட்டடி மீன் சந்தையினை மீளத் திறக்குமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையினை மீளவும் மக்கள் பாவனைக்கு திறந்து விடுமாறு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தாக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டு மீண்டும்...

யாழில் கிளைமோர் வெடிப்புச் சம்பவம் : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயம்!

வடமராட்சி கிழக்கில் வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸாரை இலக்கு வைத்து பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் வெடித்ததால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் மணல் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் வடமராட்சி கிழக்கு...