மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக Badminton செம்பியன்ஷிப் போட்டிக்கான திகதி மாற்றம்

- Advertisement -

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உலக Badminton செம்பியன்ஷிப் போட்டிக்கான திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச Badminton சம்மேளனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வருடம் நடாத்தப்பட வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் உட்பட பல்வேறு சா்வதேச போட்டிகள் 2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இதற்கமைய, சர்வதேச Badminton செம்பியன்ஷிப்  போட்டிகள் ஸ்பைனின் huelva நகரில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம்  நடைபெறுவதாக இருந்தது.

எனினும்,  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால்,  சர்வதேச Badminton சம்மேளனம் உலக Badminton செம்பியன்ஷிப்  போட்டி அட்டவணைகளை மாற்றி அமைக்கத் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 2021ஆம் ஆண்டு நவம்பா் 29ஆம் திகதி  முதல் டிசம்பா் 5ஆம் திகதி வரை சர்வதேச Badminton செம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுமென சர்வதேச Badminton சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டிகளை சர்வதேச Badminton சம்மேளனம் மற்றும் ஸ்பைன்  Badminton கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

விராத் கோஹ்லியின் தலைமையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இந்தியக் குழாம் அறிவிப்பு

விராத் கோஹ்லியின் தலைமையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது,   இதில் ரோஹித் ஷர்மா,சு ப்மன் கில்,மயான்க் அகர்வால், அஜின்கே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பாண்ட்  ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக...

அதிபர் ஆசிரியர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   இம் முறை உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பிரிவில் அதிக மதிப்பெண்களை...

நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்குவதே சிறந்த தீர்வு – ஐ.தே.க

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேசிய முடக்க செயற்பாட்டினை அமுல்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே...

எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி விசேட நடவடிக்கை

இலங்கைக்கு தேவையான அஸ்ட்ரா செனகா கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது தொகுதியை பெற்றுக் கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் முயற்சிகளை முன்னெடுக்கும் என தாம் நம்புவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி கோட்டாபய...

தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளது-எஸ் எம் மரிக்கார் 

அரசாங்கம் ஆட்சிப் பொறுபேற்று இன்று பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார்  அவர் இதனைக் கூறியுள்ளார் அவர் மேலும்...

Developed by: SEOGlitz