மெய்ப்பொருள் காண்பது அறிவு

உறுதிமொழியையடுத்து சுகாதார உதவியாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

- Advertisement -

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்கள் மேற்கொண்டுவந்த போராட்டம் வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சினி வழங்கிய உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டது.

இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கடமைக்கு வந்த சுகாதார உதவியாளர்கள் கடமைநேரத்திற்கு பின்னராக வருகை தந்ததன் காரணமாக கையொப்பம் இடும் புத்தகம் முடிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கு எதிராக போராட்டம் நடாத்தினர்.

- Advertisement -

தாங்கள் பொலநறுவையில் இருந்து வருகை தருவதன் காரணமாகவே நேரம் கடந்துவருவதாகவும் அதனை கருத்தில்கொள்ளாமல் வைத்தியசாலை நிர்வாகம் நடந்துகொள்வதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், அதிகளவானோர் பொலநறுவையில் இருந்து வருகை தருவதன் காரணமாக பேரூந்துகள் பற்றாக்குறையாகவுள்ளதாகவும் தற்போதைய சூழ்நிலையில் ஏனைய போக்குவரத்து சேவைகளும் நடைபெறாத நிலையில் உரிய நேரத்திற்கு வருகைதரமுடியாத நிலையுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கவனத்தில்கொண்ட பணிப்பாளர் இலங்கை போக்குவரத்து சபையுடன் தொடர்புகொண்டு பேசி மேலதிக பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதாகவும் இனிவரும் காலங்களில் கடமைக்கு உரிய நேரத்திற்கு சமுகமளிக்குமாறும் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

உறுதிமொழியையடுத்து சுகாதார உதவியாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது! 1 உறுதிமொழியையடுத்து சுகாதார உதவியாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது! 2 உறுதிமொழியையடுத்து சுகாதார உதவியாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது! 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

முல்லைத்தீவில் பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான குறித்த பாலைமரத் தீராந்திகளை கைப்பற்றியுள்ளதுடன் அதனை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தினையும் பொலிஸார்...

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்ந்தும் தடுத்துவைப்பு!

கல்கிஸ்ஸ - சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன்  தொடர்புடைய  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்  தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான்...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விசாரிக்க வேண்டும் : தேசிய சுதந்திர முன்னணி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம்...

கொரோனா தொற்றின் இன்றைய நிலைவரம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஆனைவிழுந்தான் பதற்றநிலை தணிந்தது : கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு!

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் காணி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில்  நீண்டகாலமாக  நெற்செய்கை...