மெய்ப்பொருள் காண்பது அறிவு

வலைத்தளங்களில் வௌியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் : கல்வியமைச்சு!

- Advertisement -

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை என கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய,  உயர்தரப் பரீட்சை குறித்து கல்விமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற உத்தியோகபூர்வ தகவல்களை மாத்திரம் கருத்திற் கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறு பரீட்சைகள் ஆணையாளர் சனத் பீ பூஜித கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில், தூர நோக்கை கருத்திற் கொண்டு ஒட்டுமொத்த கல்வி நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், சில தரப்பினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இவ்வாறான செய்திகள் குறித்து கவலையடைவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த போலியான நேர அட்டவணை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன…!

நாட்டில் மேலும் சில பகுதிகளில்  இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல்  தளர்த்தப்பட்டுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி  கிழக்கு மாகாணத்தின் கல்முனை வடக்கு  கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட  கல்முனை 1 C...

பொதுப்போக்குவரத்து சேவைகள்ளில் விசேட சோதனை நடவடிக்கை

சாதாரணதர  மாணவர்களின் கல்விசெயற்பாடுகளுக்காக  மேல் மாகாணத்தில் இன்று முதல்  பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில் பொதுப்போக்குவரத்து சேவைகள்ளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா   அதிபர் தெரிவித்துள்ளார். பாடசாலை வாகனசேவைகளில்...

ரயில்சேவைகள் இன்றுமுதல் வழமையான முறையில்…

கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்ட ரயில்சேவைகள்  இன்றுமுதல் வழமையான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் 390  ரயில்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ...

பாடசாலை போக்குவரத்துகள் குறித்து விசேட திட்டம்…!

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை...

மேல்மாகாணத்தில் இன்று திறக்கப்படும் பாடசாலைகள்..!

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

Developed by: SEOGlitz