மெய்ப்பொருள் காண்பது அறிவு

இஸ்லாமிய அமைப்பு அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை!

- Advertisement -

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதி வழங்குமாறு இஸ்லாமிய அமைப்புகளின் மலேசிய ஆலோசனைக் குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சிறுபான்மை முஸ்லிம்களின் மீதான தற்போதைய மதக் குழப்பம் இலங்கையின் பல்லின ஒற்றுமைமற்றும் சகவாழ்வுக்கு ஏற்றதாக இல்லை என, அந்த அமைப்பின்  தலைவர் Azmi Abdul Hamid தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மலேசியாவின் New Straits Times பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே,அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவர்கள் குறிவைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், முஸ்லிம்களின் மத உரிமைகளை மதிக்காது தகனம் செய்வதற்கான தீர்மானம்மிகவும் மூர்க்கத்தனமானது என குறிப்பிடப்பட்டுள்ளது இந்த செயற்பாடானது, முஸ்லிம்களின் மத சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு மாத்திரமன்றி,சர்வதேச மனித உரிமை மீறல் செயற்பாடாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

போதைப்பொருளுடன் சீதுவை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது!

சீதுவை பகுதியில் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 150 கிராம் ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா 6 கிலோ ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த...

இலங்கயில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் மாலி நாட்டிற்கு அனுப்பி வைப்பு!

இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட புதிய ஒன்பது நவீன Unibuffels கவச வாகனங்கள், மாலி நாட்டில் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன்,  புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்களும் இவ்வாறு பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...

கொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்!

குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...

Developed by: SEOGlitz