மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்து!

- Advertisement -

இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன்மூலம் நாட்டினது ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமென அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களிற்கான பணியகத்தின் முதன்மைத் துணை உதவிச் செயலாளர் அலைஸ் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சிறந்த நண்பனாக விளங்கும் அமெரிக்கா, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் மிகவும் உறுதுணையான இருந்து வந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்களை கைதுசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளிற்கும் அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியதுடன், நாட்டினது மீள்கட்டமைப்புச் செயற்பாடுகளுக்கும் தொடர்ந்தும் தனது ஆதரவினை வழங்கி வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா வலியுறுத்துவதுடன், அது நாட்டினது நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு உதவி புரியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இலங்கையின் மதிப்புமிக்க பங்காளனாக அமெரிக்கா இருப்பதாகவும், இலங்கையுடனான அமெரிக்காவின் உறவின் முக்கியத்துவத்தையும் அலைஸ் வெல்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz