ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் போதியளவு தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது,
அத்துடன் தனியார் பஸ் துறையினருக்கு அரசாங்கத்தினால் எரிபொருள் சலுகையோ அல்லது வேறு சலுகைகளோ இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்,
தற்போதைய நிலைமையின் தீவிரத்தை அரசாங்கம் உணர்ந்து கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்,
மேலும் பொதுப் போக்குவரத்து சேவைகளின் போது சுகாதார இடைவௌியை பேண வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது,
எனினும் பஸ்களில் சன நெரிசல் ஏற்படுமிடத்து அதன் மூலம் பயணிகள் பாதிக்கப்படும் சாத்தியமுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறுகின்றது,
ஆகவே இந்த சூழ்நிலையில் தனியார் பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதில் சிக்கல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,